அனுராதபுரம் மற்றும் காங்கேசன்துறை தொடருந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட நிலைய அதிபர்கள், பணிப் புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்
இதற்கமைய இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் குறித்த பணி புறக்கணிப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன் தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 26ஆம் திகதி நாடளாவிய ரீதியாக பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுப்போம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



