இலங்கையில் பால்மா விலை மீண்டும் அதிகரிப்பா?

0

இலங்கையில் மீண்டும் பால் மா இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய நாட்டிற்கு பால்மா இறக்குமதி தேவையான டொலரை நிதியமைச்சர் பெற்றுத் தராவிடின் எதிர்வரும் நாட்களில் பால்மாவுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் டொலர் நெருக்கடி காரணத்தால் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் பால்மாவிற்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டது.

இருப்பினும் இறக்குமதியாளர்களின் தீர்மானத்திற்கு அமைய பால் மாவின் விலை அதிகரிக்கப்படவில்லை.

தற்போது விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நட்டத்தினை முன்னேற்றத்தையும் ஈடு செய்யும் வகையில் அமையவில்லை.

மேலும் பால் மா இறக்குமதியின் போது அறவிடப்படும் வரியை ரத்து செய்யுமாறு நிதியமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு இதுவரையில் எந்த விதமான சாதகமான தீர்வு கிடைக்கப் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply