இந்தியாவில் தடுப்பூசி தொடர்பில் மருத்துவ நிபுணர் குழு இன்று ஆலோசனை.

0

உலகளாவிய ரீதியில் மக்களைத் தாக்கி வரும் கொவிட் வைரஸ் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததும் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில் உலக நாடுகள் முழுவதும் கொவிட் தொற்றின் முதல் அலை, இரண்டாவது அலைகளில் சிக்கி இலட்சக்கணக்கான உயிரிழப்புகள் சம்பவித்துள்ளன.

அத்துடன் கொவிட் வைரஸ் தொற்று தற்போது உருமாற்றம் அடைந்து ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் தொற்றாக உரு மாற்றம் தொற்று பரவலடைந்து வருகின்றது.

இந்நிலையில் குறித்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு இந்தியா உட்பட உலக நாடுகள் பைசர், மொடர்னா, ஸ்புட்னிக், கோவிஷீல்ட், கோவேக்ஷின் உள்ளிட்ட 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தி வருகின்றன.

மேலும் பெரும்பாலான நாடுகள் சிறுவர்களுக்கு தடுப்பூசியும் , 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்த தொடங்கிவிட்டன.

ஆனால் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.

சமீபத்தில் இந்த விடயம் தொடர்பில் தொழில்நுட்ப குழு நடத்திய ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் நிலவியது.

இதன் பிரகாரம் பூஸ்டர் தடுப்பூசி குறித்த இறுதி முடிவு இதுவரையில் எட்டப்படவில்லை.

மேலும் இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் மருத்துவ குழு இன்று ஆலோசனை நடத்துகிறது.

இந்நிலையில் இன்று இடம்பெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply