தற்போது சந்தையில் மரக்கறிகளின் விலைகள் படிப்படியாக குறைவடைந்து வருகின்றன.
இந்நிலையில் கறிமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலைகள் உயர்வாகவே காணப்படுகின்றன.
இந்நிலையில் பொருளாதார நிலையங்களில் நேற்றைய தினம் ஒரு கிலோ கிராம் கறிமிளகாய் , பச்சை மிளகாய் ஆகியவற்றின் மொத்த விலை 780 ரூபாவாகும் என்பதுடன் சில்லறை விலை 800 ரூபவாக இருந்தது.
மேலும் ஏனைய காய்கறிகளில் போஞ்சி மொத்த விலை அனைத்து பொருளாதார மையங்களிலும் 400 ரூபாவுக்கு அதிகமாகவே காணப்பட்டது.
மேலும் கெரட் 380 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



