சந்தையில் தக்காளியின் விலை சடுதியாக உயர்வு.

0

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணத்தால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில் வட கிழக்கு பருவ மழை காரணத்தால் கர்நாடகா மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்து வருகின்றது.

இதன் பிரகாரம் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு தக்காளி வரத்து குறைவடைந்துள்ளது.

இதனடிப்படையில் தக்காளியின் விலை அதிகரித்து கொண்டே வருகின்றது.

மேலும் மழை காரணமாக தக்காளி செடிகள் அழுகிய தக்காளி சாகுபடி குறைந்துள்ளது.

இந்நிலையில் ஒரு கிலோ தக்காளி கோயம்பேடு மார்க்கெட்டில் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின்னர் சற்று விலை குறைய ஆரம்பித்தது.

ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மேலும் தக்காளி விலை அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை கோயம்பேட்டில் தக்காளி சில்லரை விலையில் 130 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.

Leave a Reply