இந்திய- ரஷ்ய உச்சி மாநாடு இன்று.

0

இந்திய – ரஷ்ய உச்சிமாநாடு இன்று டெல்லியில் நடைபெறுகின்றது.

இந்நிலையில் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகல் டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அத்துடன் விமான நிலையத்திலிருந்து நேராக அவர் மாநாடு நடைபெறும் ஹைதராபாத் இல்லத்திற்கு செல்கிறார்.

அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்கவுள்ளார்.

பின்னர் இரு தலைவர்களும் , தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இதில் இரு நாட்டு இராணுவ மற்றும் வெளியுறவு மந்திரி களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி – விளாடிமிர் புதின் ஆகியோருக்கு இடையில் நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறும்.

குறித்த உச்ச மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கிடையே பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன.

மேலும் இந்தப் பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றை வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply