பாகிஸ்தான், சியல்கொட் பகுதியில் கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் உடல் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
இதற்கமைய பாகிஸ்தான் நேரப்படி 12 மணிக்கு பிரியந்த குமாரவின் உடல் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு குறித்த உடல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.



