தடுப்பூசி வழங்கலை துரிதப்படுத்துமாறு கோரிக்கை.

0

தற்போது உலகளாவிய ரீதியில் பரவல் அடைந்துவரும் கொவிட் வைரஸ் திரிபான ஒமிக்ரொன் நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த தடுப்பூசி வழங்களை துரிதமாக முன்னெடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் கோரியுள்ளனர்.

அத்துடன் அதற்குரிய சட்டத்தை கொண்டு வருவதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேலும் கொவிட் அறிகுறிகள் தென்படுமாயின் அது குறித்து மிகுந்த அவதானம் செலுத்துமாறு அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply