இளநரையைத் தடுக்கும் சீரகப்பொடி

0


நம்முடைய உணவுப்பழக்கம், கெமிக்கல் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக சருமப்பிரச்னைகள், இளநரை ஆகியவை உண்டாகின்றன. அதிலும் சிறுவயதில் உண்டாகும் இந்த நரை கொஞ்சம் சங்கடத்தைத் தான் ஏற்படுத்தும்.


அதற்கு வீட்டிலேயே இயற்கைப் பொருட்களைக் கொண்டு சரிசெய்துவிட முடியும்.


நாட்டு மருந்துக் கடைகளில் வேம்பாளம் பட்டை என்று கிடைக்கும். அதை வாங்கிப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வரலாம்.


நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம்.


கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும்.

சீரகம், வெந்தயம், வால் மிளகு, ஆகியவற்றை சம அளவு எடுத்துப் பொடி செய்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்குத் தடவி வந்தாலும் குணம் தெரியும். – Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply