இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் மீள அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய இறக்குமதிக்கான முதற்கட்ட பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுடன் அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான ஆவணங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இருப்பினும் உர இறக்குமதிக்கான வழமையான நடவடிக்கைகளின் பிரகாரம் இலங்கைக்கு உரம் கிடைப்பதற்கு 3 மாத காலமாகும்..
இந்நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் விவசாயிகளுக்கு ரசாயன உரத்தை விநியோகிக்க கூடியதாக இருக்கும் என்று உர இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்



