அதிமுக தலைமை தேர்தல் எதிர்வரும் 7 ஆம் திகதி நடைபெறும்.

0

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் களுக்கான தேர்தல் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் என அதிமுக தலைமை நேற்றைய தினம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த தேர்தலை எதிர்த்து முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி உயர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அத்துடன் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மூலம் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பிரகாரம் குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இன்று மதியம் விசாரணை நடைபெற்றது.

இதன்போது தேர்தலை எதிர்த்து தொடர மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply