மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு சந்தர்ப்பம்.

0

இந்தியாவில் நடப்பு ஆண்டு பருவமழை பொழிந்து வருகின்றது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நவம்பர் மாதம் கொட்டி தீர்துள்ளது.

இதனால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளதுடன் பல பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக டிசம்பர் மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் 132 சதவிகிதத்துக்கு மேல் மழை பொழிய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நாளை புயலாக மாறி கரையை கடக்கவுள்ளது.

இந்நிலையில் அந்தமான் அருகே வங்கக் கடலில் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply