இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் காலை வேளையிலும் சிறிதளவிலான மழை பெய்யும்.

மேல், ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலையில் பனி மூட்டமாக வானிலை நிலவும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply