போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்.

0

இலங்கையில் தற்போது வீதி விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் வீதி விபத்துகளில் 42 சதவீதமானவை உந்துருளியினால் ஏற்பட்டவை என போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நாளொன்றில் விபத்துக்கள் காரணமாக நாட்டில் உயிரிழந்தவர்களில் 40 சதவீதமானவர்கள் உந்துருளியில் பயணித்தவர்கள் என்பதுடன் 30 சதவிகிதமான பாதசாரிகளும், 9 சதவிகிதமான துவிச்சக்கரவண்டி செலுத்துனர்களும் மரணித்துள்ளனர்.

மேலும் 47 சதவீத விபத்துகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெற்றவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படாத விபத்துகளில் உயிரிழப்போர் மற்றும் காயமடைவோருக்கான இழப்பீட்டை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply