பொங்கல் பரிசு பொருட்களை தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

0

தமிழக அரசு அறிவித்தபடி பொங்கல் பரிசு தொகுப்பு விவசாயிகளும் பொது மக்களும் பயன்பெறும் வகையில் வழங்க வேண்டும் என த. மா. கா. தலைவர் ஜி. கே. வாசன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதத்தில் வருகின்ற தைப்பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் தங்களிடம் கரும்பை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கின்றனர்.

பருவ மழை வெள்ளம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்வதால் ஓரளவுக்கு விவசாய நஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள்.

மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

அத்துடன் விவசாயிகளின் எதிர்புக்கு ஏற்றவாறு அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக தமிழக அரசு செயற்பட வேண்டும்.

மேலும் விவசாயிகளிடம் கிடைக்காத பொருட்களை வியாபாரிகளிடம் கொள்முதல் செய்தால் அவர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

ஆகவே தமிழக அரசு பொங்கல் பரிசு வழங்கும் தொகுப்பிலுள்ள விவசாயிகளிடமும், வியாபாரிகளிடமும் நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply