இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார் இலங்கையின் நிதி அமைச்சர் பசில்.

0

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கையின் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தற்போது கடும் நிதி நெருக்கடி நிலை உருவாகியுள்ளது.

இதற்கமைய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை கடனாக கேட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ டெல்லிக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடியிடம் பசில் ராஜபக்சே பொருளாதார உதவியை வழங்குமாறு கேட்டுக்கொள்வார்.

மேலும் இருநாட்டு உறவுகள் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது.

இந்திய சுற்றுப்பயணத்தின்போது பசில் ராஜபக்சே மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பசில் ராஜபக்சே தனது முதல் பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் சமீபத்தில் சமர்பித்தார். மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் அடுத்தவாரம் இது நிறைவேற்றப்படும் என்று குறிப்பிடப்படுள்ளது.

Leave a Reply