சிவனொளிபாதமலை யாத்திரை செல்பவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவித்தல்.

0

இந்த ஆண்டு சிவனொளிபாதமலை யாத்திரை காலத்தை சுகாதார வழிகளை பயன்படுத்தி யாத்ரீகர்களின் பங்களிப்புடன் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நல்லதண்ணியில் நேற்றைய தினம் நடைபெற்ற கலந்துரையாடல் கருத்து தெரிவித்த போதே இரத்தினபுரி மாவட்ட பிரதம பீடாதிபதி வண பெங்கமுவே இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிவனொளிபாத மலைக்கு யாத்ரீகர்கள் கொவிட் தடுப்பூசி செலுத்திய அட்டையினை கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் சிவனொளிபாத மலை யாத்திரை காலத்தில் வருடம் தோறும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு யாத்திரிகர்கள் இன மத வேறுபாடின்றி இந்த சிவனொளிபாத மலையை தரிசிப்பது வழக்கம்.

இருப்பினும் கொவிட் பரவல் நிலை காரணத்தால் கடந்த இரண்டு வருடங்களாக வழமைபோன்று யாத்திரை மேற்கொள்ள யாத்திரிகர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply