பிரதமர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

தமிழகத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந் திகதி ஆரம்பமாகியது.

இதற்கமைய முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன், அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.

ஆனால், வேளாண் சட்டங்கள் ரத்து சட்டம் எந்தவித விவாதம் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில் மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவை மாண்பை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாக 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

போராட்டத்தின்போது 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில்நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 1 மணிக்கு மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply