இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய நியோ போர்ட்ஸ் ஒப்பந்தத்தில் உள்ள ஆறு சரத்துகளுக்கு எதிராக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் இன்று நண்பகல் முதல் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



