யானை தாக்கியதில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவிற்குட்பட்ட மன்னா கண்டல் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ள அவர் திரும்பி வராத நிலையில் அவரை தேடி உறவினர்கள் சென்ற வேளையில் அவர் இறந்து கிடந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



