“கல்யாணி பொன் நுழைவு ” என பெயர் கொண்டுள்ள இலங்கையில் முதல் தடவையாக உயர் தொழில்நுட்ப கம்பிகள் மேல் அமைக்கப்பட்டுள்ள புதிய களனி பாலம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த காலம் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
அத்துடன் 2014ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தடவையாக அதியுயர் தொழில்நுட்ப கம்பிகளை பயன்படுத்தி புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தாக பெருந்தெருக்கள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன் பிரகாரம் பழைய காளனி பாலத்துக்கு அண்மையில் ஆறு வழித்தடங்களை கொண்ட புதிய பாலம் அமைக்கும் பணி பெருந்தெருக்கள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி மூலம் ஆரம்பிக்கப்பட்டது.
களனி கங்கைக்கு குறுகாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் நீளம் 380 மீற்றராகும்.
மேலும் இந்த பாலம் இரண்டு தொகுதியின் கீழ அமைக்கப்பட்டுள்ளதுடன் முதலாவது தொகுதியில் உருக்கினாலான பாலத்தின் பகுதிக்கு 31,539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
அவ்வாறு இரண்டாவது தொகுதியில் கொங்ரீட் தொங்குபாலம் பகுதிக்கு 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



