இலங்கையின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய கனமழை.

0

நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் அண்மையாக கீழ் வளிமண்டலத்தில் தற்போது காணப்படும் தலம்பல் நிலை காரணத்தால் அடுத்த சில மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளிக்கும்.

அத்துடன் வடக்கு,வடமத்திய , கிழக்கு,ஊவா,சப்பிரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் ஒரு மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறனர்.

Leave a Reply