தவறவிடப்பட்ட பாட நெறிகளை பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை.

0

கொவிட் சூழ்நிலை காரணத்தினால் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளினதும் கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் பாடசாலைகள் அனைத்தும் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு தவறவிடப்பட்ட பாட நெறிகளை முழுமை படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய பாடத் திட்டம் ஒன்றை கல்வி அமைச்சு தயாரிக்க வேண்டும் என அதிபர் ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறு தவறவிடப்பட்ட பாட நெறிகளை பொறுமை படத்த ஆசிரியர்களும் அதிபர்களும் தயாராக உள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply