லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் இன்று திறந்து வைப்பு.

0

இலங்கையில் பொதுமக்களின் வசதியைக் கருத்திற் கொண்டு லங்கா சதொசவின் 25 புதிய கிளைகள் திறந்து வைக்கப்படவுள்ளன.

இதற்கமைய குறித்த 25 கிளைகளும் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளது .

அத்துடன் நாடு பூராகவும் ஒரே நாளில் மற்றும் ஒரே நேரத்தில் அதிகளவு விற்பனை நிலையங்களை திறக்கப்படும் சந்தர்ப்பம் இது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் லங்கா சதொச விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது .

Leave a Reply