சீரடி சாய்பாபா ஆலயத்தில் பத்தாயிரம் பக்தர்கள் உட் செல்வதற்கு அனுமதி.

0

தமிழகத்தின் கொவிட் தொற்றின் தாக்கம் படிப்படியாக குறைவடைந்து வந்தது.

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில் கடந்த அக்டோபர் மாதம் 6ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

இதற்கமைய குறித்த கோவிலுக்கு ஆன்லைன் மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பின்னர் மகாராஷ்டிராவில் தொற்று பாதிப்பு மேலும் குறைவடைந்துள்ளதையடுத்து கூடுதல் பக்தர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த கூட்டத்தின் போது சாய்பாபா கோவிலில் அனைத்து கொவிட் விதி முறைகளையும் பின்பற்றி தினசரி நேரடியாக தரிசனத்துக்கு வரும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டது.

சீரடி கோவிலில் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் அனுமதிக்கபட்ட வரும் நிலையில் நேரடி தரிசனத்துக்கு 10 ஆயிரம் பேர் அனுமதிக்கப்படுவதால் இனி தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் சாய்பாபாவை தரிசனம் செய்ய முடியும்.

இந்நிலையில் கொவிட் பாதிப்புக்கும் முந்தைய காலத்தில் சீரடிக்கு தினமும் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply