கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவு.

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று இன்றுடன் இரண்டு பூர்த்தி அடைகின்றன.

இதற்கமைய 2019ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட 7வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் அவர் குறித்த ஜனாதிபதி தேர்தலில் 52.25 சதவீத வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

மேலும் நவம்பர் 18 ஆம் திகதி அனுராதபுரத்தில் அவர் ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply