இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, திருகோணமலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும்.
அவ்வாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.
ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



