தம்பலகாமம் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்.

0

சுபிச்சமான பிரதேசம் எனும் கருத்திட்டத்தில் தம்பலகாமம் பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சபையின் தவிசாளர் ஏ.ஜீ.சம்பிக்க பண்டார தலமையில் நேற்றையதினம் காலை 09மணிக்கு சமர்ப்பித்து 10.30 தொடக்கம் 12மணிவரை விவாதித்து வாக்கெடுப்பு இடம்பெற்றது .

இந்த 2022ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அபிவிருத்தி ,சுகாதாரம்,சேதன பசளை தயாரிப்பு,திண்மக்கழிவு அகற்றுதல்,தாய் சேய் பராமரிப்பு என்பவற்றுக்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன்

இந்த சபையில் 16 உறுப்பினர்கள் இதில் வட்டாரம் சார்பாக பத்து உறுப்பினர்களும் பட்டியல் மூலமான ஆறு உறுப்பினர்களும் பங்கேற்றனர்இதில் பொதுஜனபெரமுன கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் மூன்று உறுப்பினர்களும் ஸ்ரீலங்க முஸ்லிம் காங்ரஸ் மூன்று உறுப்பினர்களும் அகில இலங்கை மக்கள் காங்ரசின் இரு உறுப்பினர்களும்தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்ரஸ் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் இரு உறுப்பினர்களும் வருகைதந்திருந்தனர் இவார்களுக்கு சபை மூலம் பல்வேறு உதவிகள் கட்சி வேறுபாடு இன்றி வழங்கியுள்ளதால் இவ்வரவு செலவு திட்டத்துக்கு பதினான்கு உறுப்பினர்கள் ஆதரவாகவும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் உறுப்பினர்கள்இருவரும் நடுநிலை வகித்தமையால் தம்பலகாமம் பிரதேச சபை வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றது

Leave a Reply