வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் தொழில் வழிகாட்டல் செயலமர்வு.

0

தொழில் வழிகாட்டல் தொடர்பான செயலமர்வொன்று தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இன்று (16) இடம் பெற்றது. வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை அடிப்படையாகக் கொண்டு இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) தொடர்பிலும் விரிவுரைகள் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வோர் தங்களது தொழில் திறன்களை எவ்வாறு தெரிவு செய்து துறை சார் பயிற்சிகளை பெறுவது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

நாட்டின் அந்நியச் செலவாணிக்கு வெளிநாட்டு தொழில் துறை பாரிய பங்கு வகிப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வளவாளராக தம்பலகாமம் பிரதேச செயலக திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஐங்கரன் கலந்து கொண்டார்.

இவ் நிகழ்வுக்கு தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் , வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான அஸ்பீர்,டில்சாத் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply