இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு நீக்குதல் குறித்த சிறப்பு முகாம்கள் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு உள்பட16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி நடைபெற்றிருந்தன.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெய்த கன மழை காரணத்தால் பல்வேறு வருடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வந்தாலும் கூட பொதுமக்கள் சிறப்பு முகாம்களில் பங்கேற்பதில் சிரமும் ஏற்பட்டதாலும் , பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு முகாம்கள் மறு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் இந்திய தேர்தல் ஆணையகத்திற்கு அறிவிக்கப்பட்டது.
மேலும் பொது மக்கள் பயனடைய வசதியாக வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் மேலும் இரண்டு சிறப்பு முகாம்களை நடததுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



