வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் வெல்லவாய, ஆனப்பலம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபரால் மிக சூட்சுமமான முறையில் தோட்டத்தில் கஞ்சா பயிரிட்ட பட்டுள்ளதுடன் அங்கிருந்து 10 கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இதன்போது 150 கிலோ கிராம் உலர்ந்த கஞ்சாவும் 325 கஞ்சா விதைகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லவாய காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



