சீன உரத்தின் தர ஆய்வு தொடர்பில் வெளியான தகவல்.

0

சீன உரத்தை மூன்றாம் தரப்பின் ஊடாக மீள் பரிசோதனை செய்வதற்கு எந்தவிதமான உடன்பாடும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய சீன நிறுவனம் மீள் பரிசோதனை செய்தாலும், சுகாதர தடுப்பு காப்பு சேவையின் விதிமுறைகளின்படி நிராகரிக்கப்பட்ட உரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்திய சீன உர கையிருப்பின் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொள்ள, சீன உர நிறுவனமும் , விவசாய அமைச்சும் உடன்பாட்டுக்கு வந்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சி செங்கோங் தெரிவித்துள்ளார்.

மேலும் சீன உர கப்பல் இதுவரையும் பேருவளைக்கும் களுத்துறை க்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் தரித்து நிற்பதாக கப்பல் போக்குவரத்து தொடர்பான தகவல்களை அறிக்கையிடும் மரைன் ட்ரெஃபிக் இணையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply