தமிழகத்தின் தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படும்.
இதற்கமைய வழக்கமாக இரண்டு நாட்கள் கழிய விழா கொண்டாடப்படும்.
ஆனால் கடந்த ஆண்டு கொவிட் தொற்றால் ஒரு நாள் விழாவாக நடைபெற்றது.
இவ்வருடம் கொவிட் பரவலால் ஒரு நாள் விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் இன்று தஞ்சையில் மாமன்னன் ராஜராஜ சோழன் 1036 வது சதய விழா கொண்டாடப்பட்டு வருகின்றது.
மேலும் மாமன்னன் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது



