தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்து அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் பருவமழை தொடங்கிய அக்டோபர் மாதத்திலிருந்து இன்றுவரை தமிழகத்தில் 26 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருக்க வேண்டும்.
ஆனால் தொடர் மழை காரணத்தால் தற்போது 40 சென்டிமீட்டர் வரை மழை பெய்து இருக்கின்றது.
இது இயழ்பை விட 54 சதவீதம் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 122 சத விகிதமும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக திருவாரூர் மாவட்டத்தில் 110 சதவீதமும், கோவையில் 103 சதவிகிதமும், அரியலூரில் 95 சதவிகிதமும் அதிகமாக மழை பெய்துள்ளது.
சென்னையைப் பொறுத்த வரையில் இந்த பருவமழை காலத்தில் 77 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிகமாக மழை பெய்துள்ளதாக ஆய்வு மையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.



