சமூக வலைதளங்களில் ஒன்றான முகப்புத்தகத்தில் போலி கணக்கு ஒன்றை உருவாக்கி தான் காவல்துறையினர் என குறிப்பிட்டு நிதி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளான வரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது .
இதற்கமைய குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த மாதம் 12ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள அணிவகுப்பில் சந்தேகநபரை முன் நிறுத்தும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



