தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணத்தால் யாழ் மாவட்டத்தில் 10,188 குடும்பங்களைச் சேர்ந்த 33,823 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் டியன் சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய கடந்த சில நாட்களாக யாழ் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணத்தினால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த வானிலை காரணத்தால் இடம்பெயர்ந்த 96 குடும்பங்களைச் சேர்ந்த 308 நபர்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



