சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை.

0

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றது.

இதற்கமைய குறித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் முதலில் காரைக்கால் ஸ்ரீஹரிகோட்டோ இடையே கரையைக் கடக்கும் என வானிலை மையதால் எதிர்வு கூறப்பட்டது.

பின்னர் கரையை கடக்கும் திசைமாறியதாக தெரிவித்த வானிலை ஆய்வு மையம் கரையை கடக்கும் திசையை துல்லியமாக கணிக்க முடியவில்லை என குறிப்பிட்டது.

இந்நிலையில் இன்று காலை நிலவரத்தின் படி காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என சென்னை மண்டல வானிலை மையம் அறிவித்தது.

தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை கிழக்கே புதுச்சேரிக்கு மேற்கே 160 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து வட சென்னை அருகே ஏய் கரையைக் கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 40 கிலோ மீட்டர் முதல் 45 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் குறித்த வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply