20,22ஆம் ஆண்டுக்கான பாதீடு நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய குறித்த பாதீடு நாளைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் பாதிட்டில் துண்டுவிழும் தொகை குறைப்பதற்கும், நாட்டின் பொருளாதாரத்தை பேணுவதற்கும் இந்த வருட பாதீட்டு திட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அவ்வாறு இந்த வருடம் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் படி மொத்த மதிப்பிடப்பட்ட செலவினம் 5,134 பில்லியன் ரூபாவாகும்.
இவற்றுள் 1,521 பில்லியன் ரூபாவை கடனை மீள செலுத்துவதற்கு செலவிடப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்தொடர்பு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 980.2 பில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது



