15 சுகாதார தொழிற்சங்கங்களின் பணி புறக்கணிப்பு நிறைவு.

0

15 சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தமக்குரிய தீர்வு கிடைக்காவிட்டால் தமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் தாதியர், மருத்துவ இரசாயன நிபுணர்கள், குடும்ப நல சுகாதார சேவை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 15 சுகாதார தரப்பினர் அடையாள பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை எடுத்தனர்.

மேலும் வேதனை முரண்பாடு, சுகாதாரச் உதவியாளர்களுக்கான கொடுப்பனவு உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அவர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply