இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பதுளை, கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தளை, கண்டி, நுவரெலியா, குருநாகல் மற்றும் காளி மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கே குறித்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.



