ஓய்வூதியதாரர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

0

அரச ஊழியர்களுக்கும் அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் சலுகைகளை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து அரச ஊழியர்களுக்கும் குறித்த சலுகை முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்துடன் 70 வயதுக்குட்பட்ட ஓய்வூதியர்களுக்கு மாதத் தவணையாக ரூபாய் 400 மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு 600 மாதாந்திர தவணையாக வசூலித்து குறித்த திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு ஓய்வு பெற்ற அரச அதிகாரிகளின் காப்புறுதி தொகை ஓய்வூதியத் திணைக்களத்தினால் சேகரிக்கப்பட்டு தேசிய காப்புறுதி அறக்கட்டளை நிதிக்கு மாதந்தோறும் மாற்றப்படும்.

மேலும்குறித்த காப்பகத்திற்கு தகுதி உடையவர்களாக இருப்பின் இதன் பங்களிப்பாளர்களாக மாறுவதற்கு இணங்காதவர்கள் இம்மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதிய திட்டத்திற்கு அல்லது பிரதேச செயலக ஓய்வுதியப் பிரிவினருக்கோ அறிவிக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply