எதிர்வரும் 19 ஆம் திகதி மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழும்.

0

21 ஆம் நூற்றாண்டின் மிக
நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி நீண்ட சந்திர கிரகணம் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

அத்துட இந்த சந்திர கிரகணம் மூன்று மணித்தியாலம் 28நிமிடங்கள், 23 வினாடிகள் நீடிக்கும் என்று குறித்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் 97 சதவீதம் நிலவின் மேற்பரப்பு சிவப்பு நிறமாகக் காட்சியளிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக வட அமெரிக்கா பிராந்தியத்திற்கு இது அதிக அளவில் தென்படும் என்றும் 2100 ஆண்டு வரை மீண்டும் இவ்வாறானதொரு நீண்ட சந்திர கிரகணம் நிகழ வாய்ப்பில்லை எனவும் நாசா விண்வெளி ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும் அடுத்த வருடம் மே மாதம் 16ம் திகதி மற்றும் மற்றுமொறு சந்திர கிரகணம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply