இந்தியாவில் குளிர் காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலின் நடை சாத்தப்பட்டுள்ளது.

0

குளிர் காலத்தையொட்டி கேதார்நாத் கோவிலில் நடை சாத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் ஆலயம் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது.

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்சபாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த கோவிலில் குளிர்காலத்தின் போது கடும் பனிப்பொழிவு நிலவும் .

இதன்பிரகாரம் குளிர் காலத்தையொட்டி கேதார்நாத் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply