அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து விரைவில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கனிய எண்ணெய் , துறைமுகங்கள் மற்றும் மின்சார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த போராட்டம் தேசிய வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படுகிறது.
அத்துடன் நேற்றைய தினம் பிற்பகல் ஒரு தொழிற்சங்கங்களுடனான கலந்துரையாடலின் பின்னர் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டணியின் இணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை, துறைமுக அதிகார சபை, இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் , தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.



