இந்தியாவில் அதிகரித்து வரும் டெங்கு தொற்றாளர்கள்.

0

இந்தியாவில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொவிட் தொற்றின் தாக்கம் மெல்ல மெல்ல குறைவடைந்து வருகின்றது.

இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் டெங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

அத்துடன் காய்ச்சலை கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் முகாம்கள் நடத்தப்பட்டு பாதிப்பு உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் மாநிலங்களுக்கு உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

குறித்த குழு டெங்கு பாதிப்பு குறித்து ஆராய்ந்து வருகின்றது.

மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு சிகிச்சை அளிப்பதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply