வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் நலன் திட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு க ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் திமுக ஆகும் .
இந்நிலையில் கடந்த 10 ஆண்டு காலம் இலங்கை தமிழர்கள் குறித்து அதிமுக அரசு கவலைப்படவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்றவுடன் இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கை தமிழர்களுக்காக திமுக இருக்கின்றது என்பதுடன் அகதிகள் முகாமை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்து உள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்.
அவ்வாறு முகாம் தமிழர்களுக்கு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை தமிழர் நலவாழ்வு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது .
மேலும் இலங்கை தமிழர்கள் ஆதரவற்றவர்கள் அல்ல என்னை உங்களின் உடன் பிறப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.



