பரீட்சைகளின் புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி.

0

பரீட்சைகளின் புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, கா.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் பெருந்தொற்று காரணத்தால் ஆறு மாதங்களின் பின்னர் தரம் 5 புலமை பரிசில் பரீட்சை மாணவர்களுக்காக கடந்த ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கா.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கு எதிர்வரும் எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.

அத்துடன் பாடசாலைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கப்பட்டதன் பின்பு கல்வி நடவடிக்கைகளை பூரண படுத்துவதற்கு தேவையான காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது.

எனவே இந்த விடயங்களை கருத்திற்கொண்டு பரீட்சைகளை நடத்துவதற்கு திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சரால் சமர்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை 2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை 2022 பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை 2022 மே 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 ஜூன் முதலாம் திகதி வரை நடத்தப்படும் என புதிய நேர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply