உடல் எடை குறைய ‘டிராகன்’ பழம்

0


உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பை குறைத்தல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை டிராகன் பழத்தின் செயல்பாடுகளாகும்.


டிராகன் பழம், நாம் அதிகமாக சுவைத்து அறியாத பழ வகைகளில் ஒன்று. இப்போது பரவலாக பழச்சந்தைகளில் கிடைக்கிறது, இந்த பழம். பார்ப்பதற்கு இளம் சிவப்பு நிறத்தில் பளிச்சென்று அழகாக இருக்கும். இதன் தாயகம், மெக்சிகோ, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா. உலகம் முழுவதும் மக்களின் இடப்பெயர்ச்சியால் இது தெற்கு ஆசிய நாடுகளுக்கு குடி புகுந்து, அவர்களின் உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தை பிடித்தது


டிராகன் பழத்தில் பல வித நன்மைகள் உள்ளன. உடல் எடை குறைப்பு, செரிமான அதிகரிப்பு, கொழுப்பை குறைத்தல், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது, ஆற்றலை அதிகரிப்பது போன்றவை இதன் செயல்பாடுகளாகும். மொத்தத்தில் உடலின் எல்லா செயல்களுக்கும் ஒரு முன்னேற்றத்தை கொடுப்பது டிராகன் பழம். இந்தப் பழம் பல வித வளங்களை உடலுக்கு கொடுப்பதால் இது சூப்பர் புரூட் என்று அழைக்கப்படுகிறது. ஊட்டச்சத்துகள் அதிகமுள்ள இந்தப் பழம், இன்றளவும் புகழ் பெற்ற பழங்களுக்கு மத்தியில் அதிக வரவேற்பை பெறாமல் இருக்கிறது.


டிராகன் பழத்தில் 3 வகைகள் உள்ளன. சிவப்புத் தோலுடன் கூடிய சிவப்பு சதை கொண்ட பழம். சிவப்புத் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். மஞ்சள் தோலுடன் கூடிய வெள்ளை சதை கொண்ட பழம். இனம், அளவு மற்றும் உருவத்தை கொண்டு இதன் சுவைகளில் வேறுபாடு இருக்கும். பொதுவாக இனிப்பு, புளிப்பு சுவையில் இருக்கும். இதனை வெட்டி உட்புறத்தை பார்க்கும்போது கிவி பழத்தை போல் இருக்கும். சதையில் கருப்புப் புள்ளிகளாக விதைகள் இருக்கும்.


இந்த விதை செரிமானத்திற்கு நல்லது. ஒயின் மற்றும் சில பானங்கள் தயாரிப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் இலைகளை கொண்டு ஆரோக்கியமான டீயை தயாரிக்கலாம். இதன் தோலில் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுகிறது. பொதுவாக இதனை யாரும் பயன்படுத்துவது இல்லை.


தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை, இந்த பழத்தின் ஆரோக்கிய பலன்களாகும். வைட்டமின் சி அதிக அளவு உள்ளதால் இந்த பழம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உடலின் மிக பெரிய சொத்து இந்த வைட்டமின் சி. செல்களின் வளர்சிதை மாற்றத்தால் உருவாகும், அடிப்படை கூறுகளை அழிக்க இந்த பழத்தில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை உதவுகிறது.


இதனால் இதய நோய், புற்று நோய் வராமல் தடுக்கப்படுகிறது. வைட்டமின் சி தவிர வைட்டமின் பி குழுவும் அதிகமாக காணப்படுகிறது. பி1, பி2, பி3 ஆகியவை, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகின்றன. சரும ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply