விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த பொருட்களை காவல்துறை விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதற்கமைய குறித்த சம்பவம் முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு உடையார்கட்டு பகுதியில் இடம் பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போதே குறித்த வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது 21 குண்டுகள் மற்றும் 60 மில்லி மீட்டர் ரக மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடி படையினர் தெரிவித்துள்ளனர்.



