நடிகர் ரஜினிகாந்த் வைத்திய சாலையில் அனுமதி.

0

நடிகர் ரஜினிகாந்த் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

இதற்கமைய நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு மருத்துவர்கள் முழு உடல் பரிசோதனையை மேற்கொண்ட போது இரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சை பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் நடிகர் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள ரத்தநாள பாதிப்பை சரி செய்யும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடிகர் ரஜினிகாந்துக்கு ஏற்கனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டிருந்தது.

இதனால் பிற உறுப்புகளின் செயல்பாடுகளையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்

Leave a Reply